வியாழன், 26 நவம்பர், 2009

இழப்பு – மனம் தாங்குமா? தவிக்குமா?

 

சம்பவம் – 1

Cry

ஒரு நண்பரின் தாயார் நீண்டநாள் புற்றுநோய் போராட்டத்திற்குப்பிறகு காலமானார். அந்த இறுதிச்சடங்கிற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று துக்கத்தைப்பகிர்ந்துகொண்டோம். அந்தச்சடங்கிற்கு இறந்தவரின் சகோதரிகள் இருவர் ஆசுதிரேலியாவில் இருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டபோதும், அவர்கள் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோதும் சகோதரி நோயால் அவதிப்பட்டுகொண்டிருந்தார் என்பதே தகவல் மற்றும் உண்மையும் கூட. ஆனால் அவர்கள் இந்தியா வந்தடைந்தபோது இறந்த உடலைத்தான் பார்க்க நேரிட்டது. அவர்கள் இருவரும் அழுதது இப்போதும் மனதைக்கனக்கிறது.

இந்த நிகழ்வை என் அலுவலக சகாவிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் என் கருத்தை மறுதலித்தார். எப்படி 30 வருடம் பிரிந்தவர்கள் ஒரே நாளில் இழப்பைத்தாங்காமல் அழமுடியும். நான் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

 

சம்பவம் – 2

railway station 

சமீபத்தில், குடும்பத்துடன் பங்களூரு-ல் இருந்து வேலூருக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக புகைவண்டிநிலையத்தில் காத்திருந்தோம். இரு சகோதரர்கள் மிக அன்னியோன்யமாக பேசிக்கொண்டதைக்கேட்க நேர்ந்தது. ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - “நான் இந்த இறப்பை எதிர்பார்த்துக்காத்திருந்தேன். நல்ல முறையில் தயாராகவே இருந்தேன். எனவே என்னை இந்த இழப்பு பாதிக்கவும் இல்லை நான் கலங்கவும் இல்லை” – என்று. மற்றவர் வெறும் மௌனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இழப்பை – மனம் தாங்குமா? தவிக்குமா?

Distanceஇழப்பு – தூரம் சார்ந்ததா?

Timeஇழப்பு – நேரம் சார்ந்ததா?

Money or Wealthஇழப்பு – பணம் சார்ந்ததா?

Position or Statusஇழப்பு – பதவி சார்ந்ததா?

Relationஇழப்பு – உறவு சார்ந்ததா?

Feel or Remembrance or Togetherness

 

 

 

 

 

 

 

 

 

 

 

இழப்பு – உணர்வு சார்ந்ததோ? ஞாபகம் சார்ந்ததோ? பழக்கம் சார்ந்ததோ? மனம் புரியாமல் தவிக்கிறது.