சனி, 17 மார்ச், 2012

தமிழனுக்கு தமிழனாக தோள் கொடுக்க தேவை பெருந்தன்மை..ஒற்றுமை..

ஏதாவது தெளிவு நம்மிடம் உண்டா? ஈழத்தமிழர் நலனில்?
அரசியல் ஒன்றர கலந்துள்ளது....அனைவரின் மனதில்...

இந்நாள் முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தால் பாராட்டுகிறோம்...
அவர் முன்னாள் சொன்ன "போரென்றால் மக்கள் இறப்பது சாதாரணம்" - வைகோ பொடாவில் கைது...இன்னும் மற்றவைகளை மறந்துவிட்டோம்.ஆனால் முன்னாள் முதல்வர் காலம் தாழ்ந்து கருத்து உரைத்தாலும் உடனடியாக அவரை எதிர்த்தும் கிண்டலடித்தும் சிரிப்புசித்திரம் வரைவது, வசைபாடுவது..

ஒரு நாளும் இந்த மனிதர்கள் அந்த அம்மணியை கேவலமான வார்த்தையில் திட்டமுடியுமா ? வெட்டிப்போட்டுவிடும் உங்கள் கைகளை.../ வாழ்க்கையை..

தமிழன் என்ற ஒரே காரணத்தால் தான் இவரை வசை பாடுகிறீர்கள்..

கனடா ஈழத்தமிழ் இயக்க தலைவர் எவ்வளவு மன உண்மையோடு பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில் தமிழ் நாட்டு அரசியல் கலப்பின்றி ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் சேர்த்தே நன்றி பாராட்டியிருக்கிறார்.

நண்பர்களே எல்லோரும் ஒன்று படுவோம்..சொல்வது யாரென்று பாராமல் சொல்லப்படுவது என்ன என்று பார்த்து , அவை நாம் நம் மக்களுக்கு நன்மை பயக்குமெனில் கண்திறந்து பின்செல்வோம் அல்லத உடன் அழைத்து செல்வோம்...தமிழனின் வெற்றியை நோக்கி...ஒற்றுமையாக.... நான், நீ, அவன், அவள், அவர், இவர், இவன்..அனைவரும்...

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

லஞ்சம் லாவண்யம் இந்தியா - உங்கள் பங்கு

இதனால் அனைத்து இந்தியக்குடிமக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கீழே உள்ள இணைய இணைப்பைக் கிள்ளவும்...பிறகு உங்கள் உரிமையையும் கடமையையும் சரிவரச்செய்யவும்...

என்றென்றும் அன்புடன்,

சக குடிமகன்...
http://www.truthaboutindiacorruption.org/

வெள்ளி, 21 மே, 2010

போடுங்கம்மா, போடுங்கய்யா, போடுங்கண்ணா, போடுங்கக்கா..நிலைமை!!

அன்பு உள்ளங்களே!

கடந்த ஆண்டு இலங்கைக்குள்ளும், வெளிநாட்டிலும் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு சாக்காடான மிகக்கொடுமையான ஆண்டு. போரின்போதும், அதற்குப்பின்னரும் இலட்சக்கணக்கானோர் அல்லல்படுகின்றனர்.

- 82,000 மக்கள் – சிறார், சிறுமியர், பெண்டிர், முதியோர் – கொடும் முகாம்களில் அவதிப்படுகின்றனர்

- வீடு திரும்பியதாகச் சொல்லப்படும் மக்களோ இடிபாடுகளுக்கிடையிலும், வறுமையிலும் வாடுகிறார்கள்

- துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டபோதும், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் முற்றுப்பெறவில்லை.

- 10,000க்கும் அதிகமான ஊடுருவல்காரர்கள், குழந்தைப்போராளிகள் என்று சொல்லப்படுபவர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்

- உலக அரங்கில் சொல்லப்படுகிற, விளம்பரப்படுத்துவதைதவிர ஆளும் அரசு பாதிக்கப்பட்டோருக்கு நீதியையோ, வாழ வழிவகையோ செய்யவில்லை

உங்களுக்கு குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு. உடனடியாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் திரு. பான்_கி_மூன் அவர்களுக்கு அனுப்பும் கடித்திற்கு உங்கள் மின்னொப்பம் இட்டு ஆதரிக்கவும்

www.srilankacampaign.org/takeaction.htm

உண்மையான, நேர்மையான, உறுதியாக பலன் தரக்கூடிய போர்குற்றபுலனாய்வு மேற்கொள்ள ஐ.நா_வைக்கேட்டுக்கொள்ள ஆதரவளிக்க அனைத்து ஒத்த எண்ணமுடையோரை வேண்டுகிறோம்

இலங்கை அரசு உலகப்பொது எண்ணம் கொண்ட இயக்கங்களையும், நிறுவனங்களையும், அரசாங்கங்களையும் அமைதிப்படுத்தும் வகையில் தானே ஒரு ”விசாரணைக்குழு!” அமைத்துள்ளது. திரு. பான்_கி_மூன்: எந்த ஒரு இலங்கை ஆய்வும் இதுவரை நல்ல பலனளித்ததும் இல்லை என்பதை உணர்வதோடுமட்டுமல்லாமல், தினம்தோறும் மனித உரிமைகள் வெகு இலகுவாக மீறப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்

நீங்கள் மின்னொப்பம் இட்டதோடு நிற்காமல் இந்தவலைத்தகவலை உங்கள் மற்ற தொடர்பு முறைகளில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த இலங்கை அமைதி & நீதி கேட்கும் இயக்கம் நீதியையும், உரிமைகளையும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காகவும் இயங்கும் ஓர் அகில உலக இயக்கம்

களநிலவரங்கள் மிககவலையளிப்பதாக இருப்பினும், இந்த இயக்கம் சில முன்னேற்றங்களைக்கண்டுள்ளது: இலங்கையில் நடத்தப்பட்டுவரும் மனித உரிமைகளுக்கெதிரான செயல்களைக்கண்டிக்கும் செயல்வீரர்களை வலிமைப்படுத்துவதிலும், இலங்கையுடனான வர்த்தகத்தொடர்புகளைத்துண்டிக்க ஐரோப்பிய நாடுகளிடையே கருத்தை விதைப்பதிலும்

சிலமாதங்களுக்குமுன் நாம் நடத்திய இந்தப்பணியை மறுபடியும் மேலும் உத்வேகத்துடன் தொடர உங்கள் ஆதரவைக்கோருகிறோம்.

மேலும் தகவலறிய “www.srilankacampaign.org” முகவரிக்கு செல்லுங்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழனுக்குத்தோல்வியா…….? தொலைந்த தூக்கம்….?…..கவலை……?

 

Eyeதோல்வி

இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு முழுவதும் தமிழனைப்பற்றிய கவலையில் தொலைக்காட்சிப்பெட்டிமுன் அமர்ந்தேன்.

4 மணி நேரம் தொலைக்காட்சிப்பெட்டியில் அந்த நிகழ்வையே குடும்பத்துடன் கண்கொட்டக்கொட்டப்பார்த்திருந்தோம்.

“ஏன் இப்படி? எதனால் இப்படி? நம்மினத்திடம் என்ன குறை? திரும்பத்திரும்ப நமக்கு இப்படியே அடி விழுகிறதே?”

உதவிக்கு உலகநாடுகளில் இருந்தெல்லாம் மனிதர்கள் தோளோடு தோள் சேர்ந்து உதவி புரிந்தனர்.

ஆயினும் தமிழனின் தலையெழுத்து விட்டதா? எத்தனை பேர் (மக்கள் தொகை இருந்தாலும்), எத்தனை நாட்டில் இருந்தாலும், எத்தனை வீட்டில் இருந்தாலும், ஒற்றுமை இல்லையெனில் இது தான் முடிவோ?

அது உண்பதில் ஆகட்டும், உடுத்துவதில் ஆகட்டும், உழைப்பதில் ஆகட்டும் போரிடுவதில் ஆகட்டும். ஒற்றுமை தேவையல்லவா?

எங்கே இருக்கிறது?

கடைசி முடிவு… தொலைக்காட்சி பார்த்த கண்கள் சிவந்து, அடுத்த நாள் காலை எழ காலதாமதமாகி, அலுவலகம் தாமதமாகச்சென்று, மனம்வெம்பி…என்ன செய்வது…..

 

தமிழினம்

இதுதான் உன் இடமா? முன்னேறு.

thamizinam

உன் தலைவன் “தோனி”

உன் சகதோழன் “முரளீதரன்” – இலங்கை

மற்றும் சகாக்கள்

படேல், ரைனா, பாலாஜி - இந்தியா

ஹைடன் – ஆஸ்திரேலியா

தமிழகமே, தமிழினமே, ஏன் இந்தியாவே – உனக்காக விழித்திருக்கிறது…

வேலை வெட்டியில்லாத, நேரத்தை வீணடிக்கும் தமிழனுக்கு (எப்பப்பார்த்தாலும் ஈழம், மலேசியாவில் பரிதவிக்கும் மனிதன், இலங்கைக்கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவன்னு சொல்லிட்டு இருக்கிற இனத்தவனுக்கு)

இந்தப்பதிவு ஒரு கவைக்கும் உதவாது. நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு கீழேயுள்ள முகவரியைக்கிள்ளினால் கிட்டும்.

http://chinthani.blogspot.com/2010/04/blog-post_13.html

புதன், 31 மார்ச், 2010

தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம்…..உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறது…..

Sunrise

உதித்தது ஒரு விடிவெள்ளி.

Identity

தமிழனுக்கான ஒரு அடையாளம்.

Sword

உலகத்தமிழனுக்காக ஒரு போர்வாள்.

பகைவனைத்தான் கொல்லுமேயொழிய தலைவனை அல்ல.

இதனால் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் செய்தி யாதெனில், தமிழ்நாடு ஐடியா முன்னேற்றக்கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன் என்பதை பெருமையுடனும், ஆரவாரத்துடனும் தெரிவித்துக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளேன்.

அதற்கான கரை வேட்டியும், நாலைந்து தொண்டர் அடிப்பொடியார்களும், கொடியும், சின்னமும் இன்னும் சில பல தினங்களில் அறிவிக்கப்படும். கொள்கைகள் வகுக்கக்ப்பட்டுள்ளன. அவையாவும் இன்று இருப்பது போலவே இருக்கும் என்பதைத்தெரிவிக்க இயலாது. அன்மது கொள்கைகள் காலத்தின் கட்டாயத்தினால் மீறப்படலாம். மாற்றப்ப்படலாம் என்பதை வலியுறுத்துகிறேன்.

இப்போது இக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விருப்பமுள்ள அனைவரும் வந்து சேர்ந்து நமது தமிழினத்திற்குப் பெருமை சேர்க்குமாறு இறுமாப்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்குறிப்பு: இலவச தொலைக்காட்சிப்பெட்டி, பணமுடிப்பு, பிரியாணி இவைகள் வழங்கப்படுவதாக வரும் வதந்திகளி நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவை பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பதைப்போன்றதேயாகும்

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியைத்தட்டவும்

http://tnimk.blogspot.com/

புதன், 24 மார்ச், 2010

ஒரு நடிகையின் கதைக்கு ஞாநி போட்ட “ஓ”

SpitterGnani - "O' writerLeaking Pen

புவனேஸ்வரி விவகாரத்தில் வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது என்று பிரபல எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். சாமியார் நித்தியானந்தருடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் சங்கம் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தது. நடிகைகளை பாதுகாக்க சட்ட நடவடிக்கை தேவை, அதற்காக எவ்வளவு செலவானாலும் தருகிறேன், என்று சொன்ன சூர்யா உள்ளிட்ட நடிகர்கள், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல பயந்து ஓடி ஒழியும் சூழ்நிலை உருவாகி விட்டது. பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த சத்யராஜ், விவேக் உள்ளிட்டவர்களும் பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஞ்சிதா விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை, என்றார். அதன் பிறகு அளித்த பேட்டியொன்றில், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது. நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது, என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த மவுனத்தை பிரபல எழுத்தாளர் ஞாநி கண்டித்திருக்கிறார். ரஞ்சிதாவுக்கு கடிதம் என்ற பெயரில் பத்திரிகையொன்றில் அவர் எழுதியிருப்பதாவது:-
உங்களுடைய தனிநபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள் விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்து வெளியிடுவதுதான் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய ‌போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.
புவனேஸ்வரி கைதின்போது வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும், நடிக - நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.
சாவித்ரி முதல் கனகா வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும், வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வர வேண்டும். அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

http://cinema.dinamalar.com/tamil-news/1883/cinema/Kollywood/Nadigar-sangam`s-silence-:-Gnani.htm

இவ்வாறு ஞாநி எழுதியிருக்கிறார்.

நீங்கள் அருளிய, உதிர்த்த ஞாந வார்த்தைகள்…

”நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.”

இந்த இரண்டு வாசகங்களில் உங்கள் குடும்பத்தினரை வைத்து ஒரு படப்பதிவு செய்து, இது உங்களை விபச்சாரி என்று சொல்வதற்காக அல்ல. உங்கள் காமபராக்கிரமசாலியாக காண்பிப்பதற்கே என்று பறைசாற்றுங்கள் ஞானம் நிறையப்பெற்றோரே. கண்டிப்பாக அதை ஒளிபரப்பி இந்தப்பதிவில் இருப்பவர் பெயர் ஞா….ல் ஆரம்பித்து என்றும் 7.30, 8.00, 8.30க்கு முழுப்பெயரும் சொல்வார்கள்.

மேலும், குமுதமும், ரிப்போர்டரும், தினமலரும் உங்களுக்குப் பெரிய “ஓ” போடும்.

 

நாம் எல்லோரும் சேர்ந்து இந்த ஆளுக்கு ஒரு “ஓ” போட்டே ஆகவேண்டும்…

சனி, 13 மார்ச், 2010

கலைந்த கருத்து….

 

Arrow-Target

ஒரு மனமொத்த, ஆழமான, அழகான கலந்துரையாடலின் விளைவாக

ஒரு வீரியமான கருத்து உருவானது.

ஒரு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல், ஒரு துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட குண்டைப்போல் செல்லும் வழியில் தன்னைப்போலவே உடன் பயணித்தவைகளுடன் போராடி

இலக்கைச்சென்றடைந்தது கருத்து.

புரிதல் நிறைந்த, பேணிக்காக்கும், இயற்கையான, வளமான, சுகாதாரமான, புறத்தொல்லைகளற்ற சூழ்நிலையில்

வளர்ந்து, பெரிதானது அந்தக்கருத்து.

__________________________________________

Pollution

புகைவண்டிச்சத்தம். வீடு அதிர்கிறது. தூக்கம் கலைகிறது.

மின் துண்டிப்பு. வியர்வை பெருக்கிறது. தூக்கம் கெடுகிறது.

குடி நாறுகிறது. தலைவி அழுகிறது. தூக்கம் தொலைகிறது.

____________________________________________

Crying Child

சமீபத்தில் பிறந்த அந்தக்குழந்தை அழுகிறது!