இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு முழுவதும் தமிழனைப்பற்றிய கவலையில் தொலைக்காட்சிப்பெட்டிமுன் அமர்ந்தேன்.
4 மணி நேரம் தொலைக்காட்சிப்பெட்டியில் அந்த நிகழ்வையே குடும்பத்துடன் கண்கொட்டக்கொட்டப்பார்த்திருந்தோம்.
“ஏன் இப்படி? எதனால் இப்படி? நம்மினத்திடம் என்ன குறை? திரும்பத்திரும்ப நமக்கு இப்படியே அடி விழுகிறதே?”
உதவிக்கு உலகநாடுகளில் இருந்தெல்லாம் மனிதர்கள் தோளோடு தோள் சேர்ந்து உதவி புரிந்தனர்.
ஆயினும் தமிழனின் தலையெழுத்து விட்டதா? எத்தனை பேர் (மக்கள் தொகை இருந்தாலும்), எத்தனை நாட்டில் இருந்தாலும், எத்தனை வீட்டில் இருந்தாலும், ஒற்றுமை இல்லையெனில் இது தான் முடிவோ?
அது உண்பதில் ஆகட்டும், உடுத்துவதில் ஆகட்டும், உழைப்பதில் ஆகட்டும் போரிடுவதில் ஆகட்டும். ஒற்றுமை தேவையல்லவா?
எங்கே இருக்கிறது?
கடைசி முடிவு… தொலைக்காட்சி பார்த்த கண்கள் சிவந்து, அடுத்த நாள் காலை எழ காலதாமதமாகி, அலுவலகம் தாமதமாகச்சென்று, மனம்வெம்பி…என்ன செய்வது…..
இதுதான் உன் இடமா? முன்னேறு.
உன் தலைவன் “தோனி”
உன் சகதோழன் “முரளீதரன்” – இலங்கை
மற்றும் சகாக்கள்
படேல், ரைனா, பாலாஜி - இந்தியா
ஹைடன் – ஆஸ்திரேலியா
தமிழகமே, தமிழினமே, ஏன் இந்தியாவே – உனக்காக விழித்திருக்கிறது…
வேலை வெட்டியில்லாத, நேரத்தை வீணடிக்கும் தமிழனுக்கு (எப்பப்பார்த்தாலும் ஈழம், மலேசியாவில் பரிதவிக்கும் மனிதன், இலங்கைக்கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவன்னு சொல்லிட்டு இருக்கிற இனத்தவனுக்கு)
இந்தப்பதிவு ஒரு கவைக்கும் உதவாது. நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு கீழேயுள்ள முகவரியைக்கிள்ளினால் கிட்டும்.