ஒரு மனமொத்த, ஆழமான, அழகான கலந்துரையாடலின் விளைவாக
ஒரு வீரியமான கருத்து உருவானது.
ஒரு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல், ஒரு துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட குண்டைப்போல் செல்லும் வழியில் தன்னைப்போலவே உடன் பயணித்தவைகளுடன் போராடி
இலக்கைச்சென்றடைந்தது கருத்து.
புரிதல் நிறைந்த, பேணிக்காக்கும், இயற்கையான, வளமான, சுகாதாரமான, புறத்தொல்லைகளற்ற சூழ்நிலையில்
வளர்ந்து, பெரிதானது அந்தக்கருத்து.
__________________________________________
புகைவண்டிச்சத்தம். வீடு அதிர்கிறது. தூக்கம் கலைகிறது.
மின் துண்டிப்பு. வியர்வை பெருக்கிறது. தூக்கம் கெடுகிறது.
குடி நாறுகிறது. தலைவி அழுகிறது. தூக்கம் தொலைகிறது.
____________________________________________

சமீபத்தில் பிறந்த அந்தக்குழந்தை அழுகிறது!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக