செவ்வாய், 19 ஜனவரி, 2010

தமிழன்.. பிச்சைக்காரனா? அல்லது ஆக்கப்படுகிறானா?

- பொட்டில் அறைந்த ஒரு தொடர்மின்னஞ்சலின் நகல். (நன்றி: வசந்த்ராஜ்)

BEG THAMIZHAN

PICHAI

நாளைய தமிழகம்??????????????

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

அக்கரை? பச்சை??

Bank_Othersideof the River USA-Flag

ஓரிரு ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. என் நேரம் நான் அமெரிக்காவில் (நான்கு சக்கர வண்டிகளைத்தயாரிக்கும் முக்கிய நகரான டெட்ரோய்ட்) இறங்கிய நாள் செப்டம்பர் 11 (அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் – இரட்டைகோபுரங்கள் வீழ்த்தப்பட்ட நாள். சில வருடம் கழித்து நமது பயணம்). விமான நிலையத்திலேயே தொல்லை ஆரம்பித்துவிட்டது. நமது திருவுருவமோ தாடியோடு. விமானத்தை விட்டு இறங்கி பணம் போட்டு (2 அமெரிக்க டாலர்) தள்ளுவண்டி எடுத்து என்னுடைய பெட்டிகளுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு வயதான மூதாட்டி ஆந்திராவில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் மகனைப்பார்க்க மூட்டை முடிச்சுகளுடன் இறங்கியிருந்தார். எப்படி தள்ளுவண்டியை எடுக்கவேண்டும், யாரிடம் கேட்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. ஏதோ மறுபடியும் எனது கடனட்டையைச் சுரண்டி அவர்களுக்கும் எடுத்துக்கொடுத்தேன் – சக மனிதர்களுக்கு உதவாவிட்டால் எப்படி. எனக்கு ஓரளவு தெலுங்கு தெரியுமாதலால் அந்தப்பாட்டி என்னைத்தவறாகவோ / ச்ந்தேகமாகவோ பார்க்காமல் பாசத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்புறம் வந்தது நம்ம நேரம். ஒலிபெருக்கியில் சில பேருடன் சேர்த்து என் பெயரும் அழைக்கப்பட்டது. 100 ரூபாய் செலவு செய்த தள்ளுவண்டியோடு என்னெவென்று கேட்கப்போனேன். சொன்னார்கள் என்னுடைய மூட்டை முடிச்சுகள் அனைத்தும் வேறு ஒரு நகரத்திற்கு (நியூயார்க்) கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என்று. எப்படி என்றால் பதில் நீங்கள் இலண்டனில் விமானம் மாறும்போது உங்களுடைய பொருட்கள் தவறுதலாக வேறு விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டது என்று. பிறகு விமானச்சேவை புரிபவர்களுக்குப் புரிய வைத்து ஒரு நாள் தங்கலுக்கான உறைவிடம்(5 நட்சத்திரம்), உடுக்கத்துணி, காலணி, உள்ளாடை அனைத்தையும் வாதாடி வாங்கிக்கொண்டேன். அடுத்தநாள் அனைத்தும் பத்திரமாக எனது அறைக்குவந்து சேர்ந்தது. ஆனாலும் அனைத்தும் முழுவதுமாக கலைக்கப்பட்டு, நன்றாக பரிசோதனை செய்யப்பட்டுஇருந்தது தெரிந்தது.

இந்தியாவில் எந்த ஒரு விமான நிலையத்திலும் தள்ளுவண்டிக்குப் பணம் கட்ட வேண்டியதில்லை. இந்தியா – ஏழை நாடு.

தள்ளுவண்டிக்கு பணம் வாங்கும் அமெரிக்கா – பணக்கார நாடு.

அக்கரை… பச்சை……? தொடரும்….

பின்குறிப்பு: நல்லவேளை இது ஒரு சாதாரண இந்தியக்குடிமகனுக்கு நடந்தது. இதுவே ஒரு சாருக்கான், கமலகாசன் போன்றோர்க்கு நடந்திருந்தால் நமது தொலைக்காட்சி அன்பர்களுக்கு வேலைப்பளு எவ்வளவு அதிகரித்திருக்கும். நமது செய்தித்தாள்களுக்கும் எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும். தப்பிக்கவைத்துவிட்டேன்.,