ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியைப்பார்த்தபோது:
திரைப்படம் : எதிர்நீச்சல்
காட்சி: மாது கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டார் என்று (மேலும் சில பல குற்றச்சாட்டுகளுடன்) கூறப்பட்டு அதை நம்பிக்கொண்டு ஒரு நல்ல நண்பனான நாயர் அவனை அடித்துவிடுவார். பிறகு உண்மை தெரிந்து மன்னிப்புக்கேட்பார். அப்போது மாது என்கிற கதாபாத்திரம், ஒரு சிறிய வசனம் பேசும். ”நண்பன் சாவதைகூட தாங்கிக்கொள்வேன். ஆனால் நட்பு சாவதை ஒரு நாளும் தாங்க முடியாது என்று”
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்தபோது:
நிகழ்ச்சி: காதோடுதான் நான் பேசுவேன்
நிகழ்வு: ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா… பாடலும் பாடல் படமாக்கப்பட்ட விதமும். அந்தக்கருத்தும்.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஓர் ஆவணப்படம் பார்த்தபோது:
ஆவணப்படம்: ஒரு கண்டுபிடிப்பைப்பற்றிய ஆவணப்படம். ஒருவருக்கு ஒரு கால் விபத்தின் போது பறிபோய்விட்டது. அதற்கு மாற்றாக செயற்கைக்கால் - மிக மெலிதான எடை குறைவான – பொருத்திவிடுகிறார்கள். அந்தக்கால் கொண்டு அவர் ஓடினார், மிதிவண்டி ஓட்டினார். மரம் ஏறினார்.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஒரு தொலைபேசி அழைத்தபோது:
நிகழ்ச்சி: ஒரு தனிமையான நாள், மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். உணவு அருந்தக்கூட மனமின்றி இருட்டை மேய்ந்தபடி, முகட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனது என் நண்பனுடன் / நணபர்களுடன் கோவையில் இருந்த நாட்களை மெல்ல அசைபோட்டது. அந்த நண்பனுடன் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவன் திரைகடல் ஓடி திரவியம் தேடிக்கொண்டிருப்பவன். எனக்கு எப்போதெல்லாம் மனக்கவலையும், மற்ற எந்தக்கவலை வந்தாலும் உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைபவன். நேரம் நள்ளிரவாகியிருந்தது. எனவே நான் வேண்டாம் நாளை தகவல் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றிருந்தேன். எப்படியோ உணர்ந்து அவனே கூப்பிட்டான். பேசினான். நான் நன்றாகத் தூங்க வழி செய்தான்.
விளைவு: கண்ணில் நீர். தூங்கப்போன எனக்கு.
செய்தித்தாள் படித்தபோது:
செய்தி: கொட்டும் மழையில், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும், போதிய உணவின்றி, இயற்கை உபாதைகளைக் கழிக்க போதிய வசதியின்றி சொந்த மண்ணில் அவதிப்படும் சகமனிதர்களைப்பற்றி.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
நானும், பார்த்து, படித்துக்கொண்டிருந்த கண்ணும், வடித்த கண்ணீரும் ஒன்று தான். ஆனால், உணர்வும், தாக்கமும் வேறு வேறு. ஒரு புறம் உணர்ச்சியின் வெளிப்பாடு, மறுபுறம் இயலாமையின் வேக்காடு.
7 கருத்துகள்:
Please don't get scrambled. This is a sign of aging, rather the right time to buy a quality crutch stick! Never share this one with your family members, particularly to Anni and Kids. Then you will be helpless to adjust with the isolated tough bed near the last wall. இந்த வஜனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு, நீங்க நீங்களா இருங்க! லூசு மாதிரி எதுக்கெடுத்தாலும் அழுகறது ரெம்பத் தப்பு! “இந்த நிலையும் கடந்து போகும்”- ஓஷோ/போதிதர்மா. அடுத்து வரப்போறது இதவிட டேஞ்ஜரா கூட இருக்கலாம், உஜாரா இருங்க” - தங்கமணி பிரபு சுவாமிகள் (எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!)
நன்றி பிரபு,
அவ்வப்போது என் மனைவியும், வாரிசுகளும் என்னைப்பார்த்து நகைப்பது உண்டு. முதல் மகன் எனக்காக வாதிடுவதும் உண்டு. இவ்வுலகில் அழக்கூட உரிமையில்லையா? எனக்கு இருக்கிறது என் வீட்டில். என்னைப்பிடித்த சில நண்பர்களிடத்தில்.
தங்கமணி பிரபுவின் கருத்துக்களோடு நான் முரண்படுகிறேன். எனது அன்னை துயரில் இருக்கும்போது என்னாலும் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அதுபோல்தான் மற்றவரின் துயரையும் சிலநேரங்களில் நமது கண்களின் நீர் மூலம் பகிர்ந்துகொள்ள நேரிடுகிறது. இது ஒரு ஆற்றாமையின் காரணமாகவும் இருக்கலாம் அல்லது தாங்கள் சொல்வதுபோல் இயலாமையும் இருக்கலாம். எது எப்படியோ இதுவொரு மனிதநேயத்தின் வெளிப்பாடு....‘மனித’ குணம்.
நன்றி பாலாசி,
ஆமாம். இந்தக்குழந்தை யாரு? நீங்க சின்ன வயசிலிருக்கும்போது எடுத்ததோ? அழகு.
சரியாகச்சொன்னீர்கள். மனிதன் பிறக்கும்போது இருந்த இரண்டு குணங்கள் - சிரிப்பும், அழுகையும் மட்டுமே! மற்றவையெல்லான் சுற்றியிருப்பவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை.
//Sadagopal Muralidharan சொன்னது…
ஆமாம். இந்தக்குழந்தை யாரு? நீங்க சின்ன வயசிலிருக்கும்போது எடுத்ததோ? அழகு.//
நன்றி...இந்த போட்டோ கூகிள் இமேஜ்லிருந்து எடுத்தது. பிடித்திருந்தது அதனால் முகமூடியாக வைத்திருக்கிறேன்.
கருத்துரையிடுக