புதன், 10 மார்ச், 2010

நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம்

எனக்கு வந்த மின்னஞ்சலின் நகல்.

கருத்து சத்தியமான உண்மை. ஒவ்வொரு மனிதனும் சுயதேடலில் இறங்கவேண்டிய தருணம். மயிரைப்பிடுங்கும் ஊடகங்களை இனம் கண்டு ஒதுக்கவேண்டிய நேரம். (இந்த மின்னஞ்சலை அனுப்பிய பூபதிக்கு நன்றி)

நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு..

காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன்.

வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள்.

உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம்.

நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தே இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய். ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும்.

ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?


என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.
என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.


பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன்

ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருக்குமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.


“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.


நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.
வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.


என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.


இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போது நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.


அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.
நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?
நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.


நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களின் வளங்களை இரசிக்கும், தனங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,

ரஞ்சிதா.

8 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
க. தங்கமணி பிரபு சொன்னது…

கடந்த இடுகைய இன்னும் கொஞ்சம் நல்லா எழுதலாமுன்னு நாந்தான் அகற்றினே! அத வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்னு ஏதோ ஒபாமா நேரில வந்து ரப்பர் வச்சு அழிச்சமாதிரி தகவல் தர்ற ப்ளாக்ஸ்பாட் டாட் காம் அறிவாளிகள பாராட்டியே ஆகனும்

நல்ல பதிவு முரளி!

அவனவனுக்கு அல்லது அவனவன் வீட்டு பெண்களுக்கு நடிப்பு வாய்ப்பு வர்றவரைக்கும் எல்லா நடிகைகளையும் நடிகர்களுக்கும் கூட விளக்குவச்சு நின்ன மாதிரியே காமத்தை பேசி சுகிக்கும் வக்கிர வாய்களுக்கு இந்த செய்தி அல்வா!

சாமியார கேள்வி கேட்பது என் பிறப்புரிமை, காரணம் அந்தாளை நம்பி பலர் ஏமாந்துட்டாங்கன்னு எழுதறான்! ஏண்டா சாமியார் காமத்துல உங்ககூட ஈடுபடமாட்டேன்னு பலகோடி ரூபாய்க்கு Bidding ஏதாவது பண்ணிருந்தாரா?

ரஞ்சிதாவ இப்படி அவமானப்படுத்த யார் யாருக்கு அனுமதி கொடுத்தது? இப்படியே போனா, பொதுசனத் தொடர்புள்ள வேலை பார்க்கும் எல்லார் வீட்லயும் கேமரா வைக்கலாமுன்னு ஒரு வியாக்கியானம் வருதே! அப்ப ஊருல இருக்கற பொண்ணெல்லாம் பொது சொத்தா? அந்த வகைல அவனவன் வீட்டு பெண்ணுக்கும் கேமரா வைக்கறத இவனுக ஊக்கப்படுத்தறானுகளா?

400ரூவாய்க்கு ஃபுளு பிலிம் விக்கறவனுக்கும், சப்ஸ்கிரிப்ஷன் எடுத்தீன்னா, சாமியார் ரஞ்சிதா வீடியோவ மாஸ்க் பண்ணாத வீடியோ காட்டுவமேன்னு விளம்பரம் பண்ற வாரப்பத்திரிக்கையை என்ன செய்யறது. பத்திரிக்கைகாரனா நீயும் பொதுசனத்தொடர்புலதான் இருக்கற! அப்ப உன் வீட்டு பெண்களும் ரகசிய கேமராவுக்குள் வந்த உன் பத்திரிக்கைல போடுவியா?

சிபாரிசு கல்வி, சிபாரிசு வேலைவாய்ப்பு, ப்ளாக் டிக்கட், திருட்டு டிவிடி, சினிமாங்கற பேருல வக்கிறங்கள விக்கறது இப்படி நியாயத்துக்கு புறம்பான விஷ்யங்கள் எல்லாமே சரின்னு ஆகிவிட்ட இந்த சூழலில் யாரை யார் குற்றம் சொல்லுவது? அதுசரி எத்தனை பேர் ஆன்மீகம் கற்க சாமியார்கிட்ட போறீங்க! பணக்காரனாகனும், பணத்தை காப்பாத்தனும், வியாபாரத்துல ஜெயிக்கனும், குழந்த பிறக்கனும், சீட்டு கிடைக்கனும், மனமைதி வேனும் என்கிறமாதி ஒரு கமாடிட்டி மார்க்கெட்காரனா அனுகற மாதிரித்தானெடா அந்தாள்கிட்ட அல்லது வேற சாமியார்கிட்ட போனீங்க! அதுசரி எதுக்கும் எங்கையும் போகாம வெட்டியா வேடிக்கை பார்த்தவனெல்லாம் பொங்கறீங்களே, ஏண்டா இப்படி?

ஒரு விஷயம் புரியுது முரளி! இனி தத்தம் ரகசியங்களுக்கு, சொந்த விஷயங்களுக்கு யாரும் மரியாதை தர்றாதா இல்ல! வெளிப்பட்ட அல்லாது வெளியாகாத ரகசியம் சொந்த விஷயம்னு ஒரு அமெரிக்க ஸ்டேண்டர்டுக்கு வந்துட்டாங்க! குளோபலைசேஷனின் ஒரு முகமாக இதைக் கருதலாம்னு நினைக்கிறேன்! விலை கிடைச்சா சொந்த வீடியோவ ஃபிரிண்ட் போட்டு விக்கற மனநிலைக்கு இவர்கள் வரும் நாள் அதிக தூரமில்லை!

கொசுறு:- நித்யானந்தம், ரஞ்சிதா 2 மணீ ஓடற வீடியோ பஜாருக்கு வந்துடுச்சாமேன்னு விசாரணைகள் பறக்கிறது! பண்ணாடைக, அதுல என்னடா தேடப்போறீங்க?

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பிரபு.
புரிதலுக்கும், ஆதங்கத்திற்கும்.

Virutcham சொன்னது…

இது யார் எழுதி இருந்தாலும் இது ஒரு நல்ல முயற்சி. இதை விட பயங்கரமான ஒரு அடியை மனத்தின் அடி ஆழத்திற்குச் சென்று அடிக்கும் அடியை யாரும் இந்த விவகாரத்தை வியாபாரமாக்கிய யாருக்கும், படம் எடுத்தவர், அதற்கு உதவியவர் முதல் அதை வெளியிட்ட அனைத்து ஊடகங்களும், ஏன் பல பின்னூட்டங்கள் பெற காரணம் கிடைத்த பதிவுகளின் சொந்தக்காரர்கள் வரை யாரையும் யாரும் இதை விட அதிகமாக வலிக்க வலிக்க அடிக்க முடியாது.

புரிந்து கொள்ள யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை.

http://www.virutcham.com

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி Virutcham.

புரிதலுக்கும், ஆதங்கத்திற்கும்.

nasrul சொன்னது…

இது வரைக்கும் செக்ஸ் படம் வீடியோ பாக்கறது எனக்கு சந்தோஷமா இருந்துச்சு, ஆனால் உண்மையிலயே நான் இப்ப வருத்த படுறேன்
இந்த ஈ மெயில் அனுப்பினவங்களுக்கு நன்றி. இப்படிக்கு மன்னிப்பு கேட்கவும் அருகதை அற்ற நான். பெண்ணிடம் இரத்தம் சதைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே சீக்கிரம் திருந்துங்கள் (மனசாட்சி இருந்தால் மட்டுமே).

Sadagopal Muralidharan சொன்னது…

இப்படி ஒரு எண்ணம் வந்ததே மனிதத்தனமையை வெளிக்காட்டியுள்ளது. என்னதான் நீலப்படம் பார்த்து இரசித்தாலும், நாம் அதை உலகமெங்கும் தண்டோரா போட்டு இங்க பாரு பேரென்ன தெரியுமா என்று வினாவிடை நடத்தமாட்டோம். அதிகாரம் தன் பக்கம் இருக்கும் அகங்காரத்தினால் வந்த வினை.

பெயரில்லா சொன்னது…

this video was published to show the true face of Nithyanada,and to stop thousands of people falling in his trap, but unfortunately Ranjitha has been a victim. But she didn't learn a lesson until today, she is going every where with Nithyanada and proving the fact.

கருத்துரையிடுக