புதன், 10 மார்ச், 2010

நான் கடவுள்…

  • வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை.

சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த திரையோவியங்களில் ஒன்று – நான் கடவுள். இப்படத்தைத் திரையரங்கில் 2 முறை பார்த்தேன். இரசித்தேன். கண்ணீர் மல்கினேன். இசையில் மயங்கினேன், மருவினேன். என் பார்வை மாறியது.

கடந்த வாரம் மீண்டும் இப்படத்தைப்பார்க்கவேண்டும். என் குழந்தைகளுடன் சேர்ந்து இரசிக்கவேண்டும் என்ற ஆவலால் அலைந்து திரிந்து மிகப்பிரபலமான ஒரு கடையில் தகடு வாங்கினேன். (நன்றி: MOSER BAER ரூ. 99/- ல் இரண்டு படம் – 5 பாடம்). எப்போதும் எந்தத்திரைப்படத்தகடு வாங்கினாலும், முதலில் என்னுடைய மடிக்கணனியில் ஒரு முறை பார்த்துவிட்டே அனைவருக்கும் முன் திரையிடுவது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் பார்த்தேன்.

பார்த்த எனக்கு முழுநீளத்திரைப்படங்கள் கொடுத்த படிப்பினையைக்காட்டிலும் கீழ் குறிப்பிட்டுள்ள மூன்று குறும்படங்கள் புரிய வைத்தன.

திரைப்படங்கள்:

LIFE, LOVE & HOPE

வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை

ஆங்கிலத்தலைப்புகளைத் தமிழ்படுத்திகொடுத்துள்ளேன். மிகவும் அருமை. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இளந்தளிர்களைப்பற்றிய விழிப்புணர்வு, அகன்றுணர்வு, தாயுணர்வைக்கொண்டு தந்திருக்கிறது இந்தக்குழு. அற்புதம். இந்தப் படங்களில் நடித்துள்ள அனைத்துக் குழந்தைகள், நடிகர்கள் – பிரசன்னா, இளவரசு மனதைக்கனக்கச்செய்தார்கள்.

இப்படிப்பட்ட படங்கள் எப்படியோ நான் படத்தகடு வாங்கியதால் தெரிய வந்தது. இல்லையென்றால் எப்படி எல்லோருக்கும் சென்றடையும். இவற்றைத்தான் எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் ஒளி/ஒலி பரப்பவேண்டும். இலவச மற்றும் காசு கொடுத்து தொலைக்காட்சிப்பெட்டி வாங்குபவர்கள் இல்லம் சென்றடையும்.

நிறைய வலைப்பதிவர்கள் விமர்சனம் எழுதிய படங்களைத்தயாரித்த ஒரு நிறுவனம் தான் இந்தப்படங்களையும் தயாரித்தது. சிறந்த இயக்குனர்கள் தான் இப்படங்களை இயக்கியது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள்:

மிச்கின், கிருத்திகா, சசிகுமார்,

இந்த ஆவணப்படங்கள் கடந்த 4 மாதங்களில் தமிழக நகரங்களின் திரையரங்குகளில் திரையிடப்பட்டனவாம்.

நல்ல முயற்சி. நல்ல துவக்கம். குழுவுக்குப் பாராட்டுக்கள்.

AIDS / HIV+ குழந்தைகள் பெரியோர்கள் மற்றும் எல்லோரையும் கண்டிப்பாக நாம் அனைவரும் புரிந்து கொண்டு நம்மால் இயன்ற உதவிகள் புரியவேண்டும். முக்கியமாக உதாசீனம் செய்வதை நிறுத்தவேண்டும்.

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

நான் கடவுள் படம் பார்த்துவிட்டு மலைத்திருக்கிறேன்.

இரண்டாவதாய் சொன்ன ஆவணப்படமும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. இதுபோன்ற முயற்சிகளும் மக்களை சென்றடையவேண்டும்.

நல்ல பகிர்வு...

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி க.பாலாசி. ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வலையை வலைய வந்திருக்கீங்க. நன்றி.

முக்கியமா..இவை மூன்று ஆவணப்படங்கள்.

கருத்துரையிடுக