புதன், 31 மார்ச், 2010

தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம்…..உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறது…..

Sunrise

உதித்தது ஒரு விடிவெள்ளி.

Identity

தமிழனுக்கான ஒரு அடையாளம்.

Sword

உலகத்தமிழனுக்காக ஒரு போர்வாள்.

பகைவனைத்தான் கொல்லுமேயொழிய தலைவனை அல்ல.

இதனால் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் செய்தி யாதெனில், தமிழ்நாடு ஐடியா முன்னேற்றக்கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன் என்பதை பெருமையுடனும், ஆரவாரத்துடனும் தெரிவித்துக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளேன்.

அதற்கான கரை வேட்டியும், நாலைந்து தொண்டர் அடிப்பொடியார்களும், கொடியும், சின்னமும் இன்னும் சில பல தினங்களில் அறிவிக்கப்படும். கொள்கைகள் வகுக்கக்ப்பட்டுள்ளன. அவையாவும் இன்று இருப்பது போலவே இருக்கும் என்பதைத்தெரிவிக்க இயலாது. அன்மது கொள்கைகள் காலத்தின் கட்டாயத்தினால் மீறப்படலாம். மாற்றப்ப்படலாம் என்பதை வலியுறுத்துகிறேன்.

இப்போது இக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விருப்பமுள்ள அனைவரும் வந்து சேர்ந்து நமது தமிழினத்திற்குப் பெருமை சேர்க்குமாறு இறுமாப்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்குறிப்பு: இலவச தொலைக்காட்சிப்பெட்டி, பணமுடிப்பு, பிரியாணி இவைகள் வழங்கப்படுவதாக வரும் வதந்திகளி நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவை பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பதைப்போன்றதேயாகும்

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியைத்தட்டவும்

http://tnimk.blogspot.com/

6 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

நானும் அந்த ஆட்டையில சேந்துக்கிறனுங்க... முன்னாடியே ஒரு நாளு பாத்தேன்....

Sadagopal Muralidharan சொன்னது…

தமிழினத்தைத்தலைனிமிறச்செய்யும் முயற்சியில் பங்குகொள்ள வந்திருக்கும் இளஞ்சிங்கத்தைக்கழகக்கண்மணிகளின் சார்பாக வருக வருக, வளம்பெறுக என வாழ்த்துகிறோம்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

ஆஹா... இது... கழகத்தில் சுறு சுறுப்பாக நீங்க இருப்பத்தை காட்டுகிறது...

உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை கழகத்தின் வளர்ச்சிப் பற்றி கவலைப் படவே வேண்டும்..

வாழ்க ஐடியா
வெல்க கழகம்

அலை கடலென திரண்டு வாரீர்... வாரீர்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

எக்கியூஸ்மீ வேர் இஸ் த ஃபாலோயர் விட்ஜெட்???

எங்கே... எங்கே?

Sadagopal Muralidharan சொன்னது…

நைஜீரியப்போர்முரசே. வருகைக்கு நன்றி. வருகையும், பாராட்டு வார்த்தைகளும் எம்மை உற்சாகப்படுத்தி இயக்கத்தை வளப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லை.
வாழ்க கழகம்
ஒங்குக ஐடியா

Sadagopal Muralidharan சொன்னது…

எக்கியூஸ்மீ வேர் இஸ் த ஃபாலோயர் விட்ஜெட்???

நம்ம ஆங்கிலவலைப்பூவில் கிள்ளுங்கள். என்ன மாயமோ, என்னவோ தெரியல..இந்தப்பக்கத்திலே இடமுடியவில்லை.

கருத்துரையிடுக