புதன், 9 செப்டம்பர், 2009

புரிதல்

 

என்னைப்பற்றி:

ஆறடி மனிதன் (அளவுகோல் காட்டியது)

ஆறறிவு (?)

அழகானவன் (என் தாய் எப்போதும் சொல்வது)

அறிவுள்ளவன் (என் தந்தை என்னைத்தவிர மற்றவர்களிடம் சொல்வது)

கடின உழைப்பாளி (என் தம்பி அனைவரிடமும் சொல்வது)

எதைக்கேட்டாலும் வாங்கித்தருபவர் (என் குழந்தைகள் சொல்வது)

எந்த வேலையையும் முற்றிலுமாக செய்யக்கூடியவர் (அலுவலகத்தில் சொல்வது)

எப்போதும் நம்பலாம். எதற்கும் நம்பலாம் (நண்பர்கள் சொல்வது)

பிழைக்கதெரியாதவர் (மனைவி சொல்வது)

எது உண்மை? (நான் கேட்பது)

3 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

நன்று, நல்ல சுயதேடல்! நல்ல பதிவு!

க.பாலாசி சொன்னது…

//ஆறறிவு (?)//

அதிலென்ன சந்தேகம்...

//அறிவுள்ளவன் (என் தந்தை என்னைத்தவிர மற்றவர்களிடம் சொல்வது)//

இது உண்மை...பொதுவா எல்லா அப்பாவுமே இப்படிதான்...

//எதைக்கேட்டாலும் வாங்கித்தருபவர் (என் குழந்தைகள் சொல்வது)//

நீங்களும் அப்படித்தானோ? (அவர்கள் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி)

//பிழைக்கதெரியாதவர் (மனைவி சொல்வது)//

எல்லா பொண்டாட்டிகளும் இப்படிதான் சார்...நீங்க கண்டுக்காதிங்க...

//எது உண்மை? (நான் கேட்பது)//

எல்லாமே உண்மையாக இருக்கலாம் மனிதனாய் பிறந்துவிட்டோமே....

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பிரபு வருகைக்கும் கருத்துக்கும்.

க.பாலாஜி சொன்னது...
”நீங்களும் அப்படித்தானோ? (அவர்கள் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி)”
அப்படியேதான். மகிழ்ச்சி வருகைக்கும் நல்ல பின்னூட்டத்திற்கும்.

கருத்துரையிடுக