வியாழன், 10 செப்டம்பர், 2009

சுவை: நேற்று..இன்று…நாளை…?

நேற்று

 IDLI_NETRUஆண்டு 1979
இட்லி சாப்பிட வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னேன். ஒரு ஆண்டிற்கும் அதிகம் இருக்கும் வீட்டில் செய்து சாப்பிட்டு.

முதல் நாளே அரிசியையும், உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஊறவைத்து விட்டு தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் அம்மா ஆட்டுக்கல்லில் அரிசியை இட்டு நீர் ஊற்றி சுற்ற, நானும் என் தம்பியும் தள்ளிவிட என்று மாவு ஆட்டி இரவு புளிக்கவிட்டோம்.

அதற்கும் அடுத்த நாள் வீட்டில் அனைவரும் பொங்கிய மாவை எடுத்து கலக்கி இட்லி ஊற்றி சாப்பிட்டோம். தேங்காய் துவையல் மட்டும் தான் தொட்டுக்கொள்ள.
என்ன சுவை! என்ன சுவை!

இன்று

 IDLI_INDRU


ஆண்டு 2009
இட்லி சாப்பிட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான் என் மகன். இப்போதெல்லாம் வாரத்திற்கு மூன்று முறை இட்லி சாப்பிடுகிறோம்.

முதல் நாளே அரிசியையும், உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஊறவைத்து விட்டு தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் என் மனைவி மின்சார ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி இரவு புளிக்கவிட்டார்கள்.

அதற்கும் அடுத்த நாள் காலை இட்லி ஊற்றி சாப்பிட்டோம். சாம்பார், தேங்காய் துவையல், இட்லிதூள், இன்னும் என்ன என்னவோ தொட்டுக்கொள்ள.
நாக்குக்குச்சுவைதான்! மனத்துக்கு எங்கே சுவை?

நாளை

????????

3 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பிரபு, தங்கள் வருகைக்கும், வாழ்துக்கும்.

க.பாலாஜி சொன்னது…

//அதற்கும் அடுத்த நாள் காலை இட்லி ஊற்றி சாப்பிட்டோம். சாம்பார், தேங்காய் துவையல், இட்லிதூள், இன்னும் என்ன என்னவோ தொட்டுக்கொள்ள.நாக்குக்குச்சுவைதான்! மனத்துக்கு எங்கே சுவை?//

இத்தனை சைடிஸ் இல்லைன்னாலும் இப்போதுள்ள இட்லியை சாப்பிடமுடியாது...

ஆட்டுக்கல்லில் ஆட்டி செய்யும் இட்லியின் சுவை தனிதான். நம் மனம் விரும்புவதும் அதைதான்...

நல்ல பகிர்வு அன்பரே.....

கருத்துரையிடுக