புதன், 23 செப்டம்பர், 2009

மும்மொழிக்கொள்கை.. ஒரு கருத்துரையாடல்…தமிழ்???

கடந்த 18ஆம் தேதி (18.09.2009), ஒரு மிக முக்கியமான கருத்துரையாடல். நடத்தியது நமது நாட்டின் மிகச்சிறந்ததாகப்போற்றிக்கொள்ளும் ஒரு ஆங்கிலச் செய்தித்தொலைக்காட்சி.

என்ன பேசுகிறார்கள் எதைப்பற்றிக்கருத்துரையாடுகிறார்கள்?

மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் இனி அனைத்து மாநிலங்களின் கல்வி பயில்வித்தலில் ஒரு மொழியாக ஆங்கிலத்திலும் (உலக நாடுகளுக்கு ஒரு பாலமாக இருக்கும் என்பதால்) அடுத்ததாக இந்தியிலும் (இந்திய மாநிலங்களுக்கிடையில் ஒரு பாலமாக் இருக்கவைக்கலாம் என்ற எண்ணத்தில்) அப்புறம் மாநில மொழியிலும் கற்பிக்கவேண்டும். அதாவது எல்லா மாநிலங்களும் இப்போது இந்தியைப் பாடத்திட்டத்தினுள் சேர்த்தாக வேண்டும். இந்தக்கருத்தை அவர் சூட்சுமமாக /இலை மறை காயாக / ஒரு சிந்திக்கவேண்டிய மாற்றமாக முன் வைத்துள்ளார்.ezhuthu

இதைப்பற்றித்தான் அந்தத்தனியார் தொலைக்காட்சியில் கலந்துரையாடல். நம் நாடெங்கிலிருந்தும் நிறையப்பேர் அழைக்கப்பெற்றிருந்தார்கள். தோராயமாக 1 1/2 மணி நேர விவாதம். அனைவரும் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சில உண்மையாகவே நன்றாகவும், ஆழமாகவும் இருந்தது. இந்தி பேசுபவர்கள் மட்டுமன்றி, கன்னடம், உருது, துளு, மராத்தி என்று பணத்தாளில் அச்சடிக்கப்பெற்றிருக்கும் அனைத்து மொழி பேசுபவர்களும் தத்தமது கருத்துக்களைப்பகிர்ந்துகொண்டனர். இந்தக்கருத்தாய்வு முக்கால்வீசம் ஆங்கிலத்திலும், கால்வீசம் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டது.TV

இந்த நிகழ்ச்சியில் கல்தோன்றி மண்தோன்றா காலத்துமுன் தோன்றிய மூத்த குடியின் மொழியைப்பற்றிக் கருத்துரையும், கலந்துரையும் ஆற்ற அழைக்கபெற்று அதைச்செவ்வன செய்தவர் யார் தெரியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

  1. தமிழ்ப்பேராசிரியரா?
  2. தமிழ் எழுத்தாளரா?
  3. த்மிழ் ஆராய்ச்சியாளரா?
  4. த்மிழ் அரசியல்வாதியா?
  5. தமிழ் இலக்கியவாதியா?
  6. தமிழ்க்கவிஞரா?
  7. தமிழ்ப்புலவரா? questions

மேற்கண்டவற்றில் ஏதாவதொன்றைத்தேர்வு செய்திருந்தீர்களானால், தாங்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பது திண்ணம். அல்லது இது போன்றதொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப்பார்க்க உங்களுக்கு வீட்டில் அனுமதியில்லை என்று பொருள்.

நாம் எல்லோரும் கண்டிப்பாகப்பெருமையடையவேண்டிய செய்தி என்னவென்றால், நமக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியவர் வேறுயாருமல்ல புகழ்பெற்ற தமிழ்(?)திரைப்பட நடிகை திருமதி. குசுபு சுந்தர் அவர்கள்.

வாழ்க தமிழ். வாழ்க இத்தகைய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள். வளர்க அவற்றின் தரம். அவர்களின் செய்திகளைப்பின்பற்றும் மக்களை ஏழாம் அறிவு ஆட்கொள்ளட்டும்.

4 கருத்துகள்:

க.பாலாஜி சொன்னது…

//நாம் எல்லோரும் கண்டிப்பாகப்பெருமையடையவேண்டிய செய்தி என்னவென்றால், நமக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியவர் வேறுயாருமல்ல புகழ்பெற்ற தமிழ்(?)திரைப்பட நடிகை திருமதி. குசுபு சுந்தர் அவர்கள்.//

என்ன சொல்வது...வெட்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா என்று தெரியவில்லை...

பயனுள்ள சிந்தித்து பார்க்கவேண்டிய இடுகை....

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பாலாஜி,
உங்கள் வருகைக்கும், சிந்தனைக்கும்.

க. தங்கமணி பிரபு சொன்னது…

மொத்த தமிழ்நாட்டுக்கே இப்ப பிடிச்சது நமீதா (மச்சான்) தமிழ்தான். அந்த மாதரசியை விட்டுட்டு இந்த குஷ்பு தமிழரசிய அவிங்க்ய அழைச்சத நான் வன்மையா கண்டிக்கிறேன்!!

Sadagopal Muralidharan சொன்னது…

அப்படிப்போடுங்க. எத்தனை பேரு இப்படிக்கிலம்பிட்டீங்க. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

கருத்துரையிடுக