கடவுள் எதிர்ப்பு. கடவுள் அவமதிப்பு. கடவுள் புறக்கணிப்பு. கடவுள் மறுப்பு. கடவுள் மறைப்பு.
தீண்டாமை எதிர்ப்பு. தீண்டாமை அழிப்பு. தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை மறைப்பு. தீண்டாமை மன்னிப்பு.
மூடப்பழக்கம் எதிர்ப்பு. மூடப்பழக்கம் ஒழிப்பு. மூடப்பழக்கம் அழிப்பு. மூடப்பழக்கம் மறைப்பு. மூடப்பழக்கம் மன்னிப்பு.
பெண்ணடிமை எதிர்ப்பு. பெண்ணடிமை ஒழிப்பு. பெண்ணடிமை அழிப்பு. பெண்ணடிமை மறைப்பு. பெண்ணடிமை மன்னிப்பு.
மஞ்சள் துண்டுடித்தி, ஆழ்வார் பாடல்களைப்பாடி, ஒன்றிர்க்கும் அதிகமான மனைவியைக்கொண்டு, சாதிவாரியாக பதவிதந்து / பெற்று, கதராடையையும் – வண்ணக்கரைவேட்டியையும் ஆண்டொன்றுக்கு மாற்றிக்கொள்ளும் மாக்களிடம், மனிதன்கொள்ளும் பகுத்தறிவுப்பாசறையாக உருக்கொண்டு போற்றும் தமிழினம் இருக்கும் வரை பகுத்தறிவு தழைக்குமென்ற எண்ணம் வெறும் பேச்சாகத்தான் இருக்குமேயொழிய வழக்கில்வருவது மிக மிக அரிது.
பகுத்தறிவு:
நரகாசுரனைக்கொன்ற நாளைக்கொண்டாட வரும் பண்டிகை நாளுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது. (ஆனால் அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு அல்லது ஊக்கத்தொகை வழங்கலாம்.)
ரம்சானுக்கும், இயேசு பிறந்தநாளுக்கும் வாழ்த்துத்தெரிவிக்கலாம். மசூதிக்கும் கூட போகலாம். யாருக்கும் தெரியாமல்(முக்காடு போட்டுக்கொண்டு - அதற்குத்தான் துண்டு இருக்கிறதே?) எதிகாலம் உரைப்பவர் சொல்லும் கோவிலுக்குச் செல்லலாம்.
இந்த சாதிக்கு அல்லது மதத்துக்கு ஒதுக்கீடு, அந்த சாதிக்கு அல்லது மதத்துக்கு உள் ஒதுக்கீடு என்று பிரித்தே வைத்திருக்கவேண்டும். சேர்ந்துவிட்டால் எப்படி ஓட்டைப்பிரிப்பது (வீட்டு ஓட்டையும், வாக்குகளையும்)
எந்தவொரு செயலைத்துவக்கும்போதும், அது புதிய சட்டசபைவளாகமாகட்டும், புதிய காவல்நிலையமாகட்டும், குளம் தூர்வாருவதாகட்டும், நல்ல நேரம் பார்த்தே – கும்பிட்டே ஆரம்பிக்கவேண்டும்.
எச்சரிக்கை:
பகுத்தறிவு என்ற போர்வையில் நாம் இன்று பார்த்துக்கொண்டிருப்ப்வையெல்லாமே பகட்டறிவுதான் என்று புரியும்வரை நமக்கு ஆறறிவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது கடினமே?
3 கருத்துகள்:
//மனிதன்கொள்ளும் பகுத்தறிவுப்பாசறையாக உருக்கொண்டு போற்றும் தமிழினம் இருக்கும் வரை பகுத்தறிவு தழைக்குமென்ற எண்ணம் வெறும் பேச்சாகத்தான் இருக்குமேயொழிய வழக்கில்வருவது மிக மிக அரிது.//
மிகவும் சரியான வரிகள்...
பகுத்தறிவை பறைசாற்றும் பழங்கள் எல்லாம் வெளியிடங்களோடு சரி...வீட்டிற்குள் அதை திணிப்பதில்லை. இரட்டை வேஷமிடும் பகுத்தறிவாதிகள்தான் இன்று நம்மிடையே உறவாடிக்கொண்டிருக்கிறார்கள்...ஓட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்...
//பகுத்தறிவு என்ற போர்வையில் நாம் இன்று பார்த்துக்கொண்டிருப்ப்வையெல்லாமே பகட்டறிவுதான் என்று புரியும்வரை நமக்கு ஆறறிவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது கடினமே?//
பொருத்தமான வரிகள்...புரிந்து கொள்பவர்கள் ஏற்றுக்கொள்வர், அல்லாதோர் அழிந்துபோவர்....
பயனுள்ள சிந்தனை இடுகை அன்பரே....
முடிவா என்ன சொல்லறீங்கன்னு புரியல! தவிர இப்ப இருக்கற பொய்யான(pseudo) தகவல் ஊடகங்களும் பொழுதுபோக்கு புண்ணாக்குகளும் பகுத்தறிவு, நாத்தீகம், தாழ்தப்பட்டோர், பிராமன்ரல்லாதோர் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான செயலை மிக நுட்பமாக செய்கிறார்கள்! அதில் ஒன்று மேற்சொன்ன கொள்கைகள் நீர்த்துப்போய்விட்டன என்னும் வாதம்! எப்படி தமிழ்நாட்டின் எந்த வட்டாரத்தில் வாழ்ந்தாலும் அந்த வட்டாரத்தமிழை பேசாமல் அவா, இவா என்று தன் சாதிக்கான தமிழை பேசியபடி ஒரு கூட்டம் உயிர்வாழ்கிறதோ அவர்களை விட பலமடங்கு சுயமரியாதைக்காரர்கள் பகுத்தறிவோடு, கடவுள் எதிப்பையும் பெண் விடுதலையையும் போற்றி வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளை கணக்கில் கொண்டு தமிழினம் விடுதல் பெற்ற காரணிகளை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது!
ஒரு முக்கியமான விஷயம் பகுத்தறிவும், சுயமரியாதையும் வெறும் வாதமோ அல்லது வேதமோ அல்ல! அவை நம் வாழும் முறைகள்! நம் வாழ்கையை சுய அறிவோடு நாம்தான் வாழவேண்டும்! அவர் அப்படி வாழவில்லை, இவர் இப்படி வாழவில்லை என்கிற கூப்பாடு நமக்கு வேண்டாதது மட்டுமல்ல! மறுபடியும் நினைவூட்டுகிறேன் கடவுள் மறுப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, பகுத்தறிவு என்பது அவரவர்க்கு தன் சுயம் சம்பந்தப்பட்டது! முடிஞ்சா அப்படி வாழப்பாருங்க! உங்களை யாரும் கைய புடிச்சு இழுக்கல! இந்தமாதிரி விமர்சனங்கள் மேல்சாதி வெறியர்களுக்கு அல்வா! ப்ளீஸ் கிண்டாதீங்க!!
க.பாலாஜி சொன்னது...
மிக்க நன்றி. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
க. தங்கமணி பிரபு சொன்னது...
அழகு பின்னூட்டம். இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படிப்புரிந்துகொண்டு வாழ்பவரைப்பற்றியான விமர்சனம் அல்ல! நீங்கள் குறிப்பிட்ட ஊடகங்கள், இன்றைய அரசியல்வாதிகள், இன்றைய நாளில் பொதுவாக அறியப்பட்ட பகுத்தறிவாளர்களைப்பற்றிய ஒரு வருத்தமும், இனம்காணுதலும் தான் இந்தப்பதிவு. உண்மையான பகுத்தறிவாளர்களின் மனதைக்காயப்படுத்தவோ, பகுத்தறிவு நமது நாட்டிற்கு செய்த மாபெரும் சேவைக்கு களங்கம் கற்பிக்கவோ இடப்பட்டதல்ல இந்தப்பதிவு.
கருத்துரையிடுக